

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், கூடுவாஞ்சேரி பகுதியில் நாளை பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இளையோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கம் இந்த முகாமை நடத்துகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள இன்டிமேட் ஃபேஷன்ஸ் இந்தியா என்ற தனியார் நிறுவன (lntimate fashions india pvt. ltd.) வளாகத்தில், நாளை காலை 9 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், 6-ம் வகுப்பு படித்த வர்கள், பள்ளி இடைநின்றவர் கள், 10, 11-ம் வகுப்புகளில் தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த வர்கள், 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்துகொள்ளலாம்.
முகாமில் கலந்துகொள்ள வரும் பெண்கள், புகைப்படம், குடும்ப அட்டை, சாதிச் சான்று மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலை எடுத்து வரவேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.