

சென்னை கொளத்தூர் அம்பேத்கர் நகர் 3-வது தெருவில் வசிப்பவர் அண்ணாமலை (58). சென்னை உயர் நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்க்கி றார். இவரது மனைவி மல்லிகா (55). இவர்களது மகள்கள் மால தி (32), செல்வி (28) இருவரும் திருமணமாகி கொளத்தூர் பகுதி யிலேயே வசிக்கின்றனர். இரு வரும் 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் காஸ் வாடை வருவதை உணர்ந்த மல்லிகா, எழுந்து வந்து சமையல் அறை மின்விளக்கை போட்டார். சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அறை முழுவதும் காஸ் பரவியிருந்ததால் உடனே தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இதில் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது. தீக்காயம் அடைந்து இடிபாடுகளுக்கு இடை யில் சிக்கிய மல்லிகா, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அண் ணாமலை, மாலதி, செல்வி, சிறுமி அகிலா (13) ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு லேசான தீக்காயமும் ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் அருகில் உள்ள 3 வீடுகளும் சேதமடைந்தன. ஜன்னல் கண்ணாடிகள், சிலாப்பு கள் உடைந்து விழுந்தன.
அந்த வழியாக நடந்து சென்ற சிவராஜ் (24) என்ற இளைஞரின் தலையிலும் செங்கல் துண்டுகள் விழுந்து காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த அண்ணாமலை, மாலதி, செல்வி, அகிலா ஆகி யோரை மீட்டனர். வியாசர்பாடி, பெரம்பூரில் இருந்து தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற் றினர். காயம் அடைந்த அனை வரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மல்லிகாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரி சோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சமையல் அறையில் 4 சிலிண்டர்கள் இருந் துள்ளன. இதில் பயன்பாட்டில் இருந்த சிலிண்டர் மட்டுமே வெடித்துள்ளது. மீதமுள்ள 3 சிலிண்டர்கள் காலியானவை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.