தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்; வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்; வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு பருவ மழை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் நிறைவடைந்துவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வட கிழக்கு பருவ மழைக் காலத்தில் தமிழகத் தில் சராசரியாக 44.04 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு மாநிலத்தின் சராசரி மழை அளவு 43.03 செ.மீ. ஆக பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 91.56 செ.மீ. மழை சராசரியாக பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75.18 செ.மீ. மழைதான் பதிவானது.

வடகிழக்கு பருவ மழை முழுமை யாக முடிவடைந்துவிட்ட நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இனி வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்றும் மழை இல்லாத வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in