பஸ் ஊழியர்களுடன் பேச்சு: தமிழக அரசு குழுவில் கூடுதலாக 3 பேர் நியமனம்

பஸ் ஊழியர்களுடன் பேச்சு: தமிழக அரசு குழுவில் கூடுதலாக 3 பேர் நியமனம்
Updated on
1 min read

போக்குவரத்துத் தொழிலாளர் களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்த தமிழக அரசு அமைத் துள்ள 11 பேர் கொண்ட குழுவில் கூடுதலாக 3 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணை யில் கூறியிருப்பதாவது:

அரசு போக்குவரத்து தொழிலா ளர்களின் 12வது ஊதிய ஒப்பந் தத்துக்கான பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தரப்பில் கலந்து கொள்ள 11 பேர் கொண்ட குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவில் நிதித்துறை கூடுதல் செயலர் உமாநாத், போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர்கள் உட்பட 11 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழு தற்போது விரிவாக்கப்பட்டுள்ளது.

இதில், சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் இயக்குநர், திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலர், போக்குவரத்து துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் ஆகிய 3 பேர் புதிதாக குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in