திருவள்ளுவர், தந்தை பெரியார் விருதுகள் அறிவிப்பு: ஜன.16-ல் முதல்வர் வழங்குகிறார்

திருவள்ளுவர், தந்தை பெரியார் விருதுகள் அறிவிப்பு: ஜன.16-ல் முதல்வர் வழங்குகிறார்
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது, தந்தைபெரியார் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியானவர்கள் பட்டியலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருவள்ளுவர், தந்தைபெரியார் விருதுகளை 16.01.2015 அன்று பிற்பகல் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

விருது பெறுவோருக்கு தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ச்திருவள்ளுவர் விருது: திருக்குறள் க. பாஸ்கரன்

தந்தை பெரியார் விருது: டாக்டர் தாவூஜீ குப்தா

அண்ணல் அம்பேத்கர் விருது: ஆழி.கு. மகாலிங்கம்

பேரறிஞர் அண்ணா விருது: பேராசிரியர் கஸ்தூரி ராஜா

பெருந்தலைவர் காமராசர் விருது: கருமுத்து தி.கண்ணன்

மகாகவி பாரதியார் விருது: முனைவர் இளசை சுந்தரம்

பாவேந்தர் பாரதிதாசன் விருது: கவிஞர் கண்மதியன்

தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது: முனைவர் கரு. நாகராசன்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது: பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ்

ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in