Published : 21 Jan 2015 09:16 AM
Last Updated : 21 Jan 2015 09:16 AM

இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழகத்தில் நடக்கின்றன: ஆளுநர் ரோசய்யா கவலை

இந்தியாவில் நடைபெறும் விபத்து களில் 15 சதவீதம் தமிழகத்தில் நடக்கின்றன என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கவலை தெரிவித் துள்ளார்.

இந்திய செஞ்சிலுவை சங்கத் தின் ஆண்டுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கலந்து கொண்டார். அவர் பேசும் போது, “இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு எட்டு விபத்துகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழகத்தில் நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டு பேர் செஞ்சிலுவை சங்கம் அல்லது அவசர ஊர்தி சேவை போன்ற முதலுதவி சங்கங்களில் தொண்டாற்ற வேண்டும். 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் 16 லட்சத்து 35 ஆயிரம் இளைஞர்கள் சேர்ந்துள்ளனர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் பல ஆயிரம் இளைஞர்களிடம் சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் அதிக அளவில் ரத்த தானம், செஞ்சிலுவை சங்கத்துக்கு ஒத்துழைப்பு, அவசர கால உதவி, உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிறந்த வகையில் தொண்டாற்றிய 26 அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டன. இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார ஆணையர் மற்றும் முன்னாள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்த்குமார் உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியர்களும் பாராட்டு சான்றிதழ்கள் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர்.ஏ.முருகனாதன், தலைவர் டாக்டர்.ஹரீஷ் எல்.மேத்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x