Published : 14 Jan 2015 02:34 PM
Last Updated : 14 Jan 2015 02:34 PM

அமைதி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொள்ளும் ஸ்ரீஎம்

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12-ம் தேதி, அவர் தியானம் செய்த முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து அமைதி, மத நல்லிணக் கத்தை வலியுறுத்தி காஷ்மீர் நோக்கி 18 மாத நடைப்பயணத்தைத் தொடங்கி யிருக்கிறார் சமூக சேவகர் மும்தாஜ் அலிகான்.

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணத்தை மத்திய அமைச்சர்களும், சர்வமதத் தலைவர்களும் இணைந்து நேற்று முன்தினம் தொடங்கிவைத்தனர். 11 மாநிலங்கள் வழியாக 86 மாவட்டங்களை 6,500 கி.மீ. தூரம் கடந்து இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த பொன்னம்பலம் கூறியதாவது: கேரள மாநி லம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்தான் எம். பிறப்பால் இஸ்லாமியரான இவருக்கு பெற்றோர் மும்தாஜ் அலிகான் என பெயரிட்டனர். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

திடீரென ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ளவே இமயமலை சென்று தவம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த சாமியார்கள் இவருக்கு மது என்று பெயர் சூட்டினர். பின்னர் ஊர் திரும்பியதும் தனது பெயரை ‘ எம்’ என வைத்துக்கொண்டார். உலகிலேயே ஆன்மிகத்துக்கு அர்த்தம் சொன்ன நாடு இந்தியா. சத்தியம்தான் வேதம் என மேடைதோறும் வலியுறுத்தி வரும் ஸ்ரீ எம் அமைதி, ஒற்றுமை, மத நல்லிணக்கம், பெண்கள் முன்னேற்றம், இளைஞர் மேம்பாடு, மக்களின் வாழ்வாதாரத்தை காத்தல் ஆகிய 6 அம்சங்களை வலியுறுத்தி மத நல்லிணக்க நடைப் பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஏராளமான நூல்களை எழுதியுள்ள இவர், ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி யில் நாடோடி குழந்தைகளுக்கு இலவசப் பள்ளிக்கூடம் அமைத்து கொடுத்துள்ளார். இவ்வாறு பொன்னம்பலம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x