Published : 09 Jan 2015 09:35 AM
Last Updated : 09 Jan 2015 09:35 AM

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கு 1,400 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்: 138 இடங்களில் 322 வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்காக 1,400 மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் தயாராக உள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலையும் இணைத்து நடத்த வாய்ப்புள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கடந்த 5-ம் தேதி தெரிவித்தார். எனவே, அடுத்த மாதம் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் வி. மனோகரன் நியமிக்கப்பட்டார். இடைத்தேர்தலையொட்டி, ஸ்ரீரங்கம் தொகுதியில் மட்டும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல், அனைத்துத் தொகுதிகளுக்கும் அடுத்த திருத் தம் வரையிலான இறுதி வாக்காளர் பட்டியலாகவே அறிவிக்கப்பட் டுள்ளது.

ஆனால், ஸ்ரீரங்கம் தொகு திக்கு தற்போதைய இறுதிப் பட்டியலும் வரைவு வாக்காளர் பட்டியலாகவே எடுத்துக் கொள் ளப்பட்டுள்ளது. இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தொடர்ந்து வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத் தம் நடந்து வருகிறது. விரைவில் சிறப்பு முகாம் நடத்தப்படும். அதன் பின்னர், இடைத் தேர்தலுக்கான இறுதிப்பட்டியல் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஸ்ரீரங்கம் தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் குறித்த அறிவிப்பைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீரங்கம் தொகுதியில் 138 இடங்களில் 322 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 1,400 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுவ தாகக் கண்டறியப்பட்டு, அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எனவே, இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011 தேர்தலுக்குப் பிறகு புதிதாக 49,000 வாக்காளர்கள்

2011 சட்டப்பேரவைத் தேர் தலின்போது, ஸ்ரீரங்கம் தொகுதி யில் 2,20,962 வாக்காளர்கள் இருந் தனர். நாடாளுமன்றத் தேர்தலின் போது, 2,66,872 ஆக வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்தது.

கடந்த நவம்பரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்துக்குப் பிறகு, ஜன. 5-ம் தேதி வெளியிடப் பட்ட பட்டியலின்படி, 2,70,129 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 1,33,20 பேர், பெண்கள் 1, 37,96 பேர், இதரர் 13 பேர்.

2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் தொகுதியில் 49,167 வாக் காளர்கள் அதிகரித்துள்ளனர். இதில், ஆண்கள் 22,712 பேர், பெண்கள் 26,452 பேர், இதரர் 13 பேர். இவர்கள் 2011 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x