

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக கே.பாலமுருகன் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு இந்திய வன அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட பாலமுருகன், மேற்கு வங்க மாநிலத்தில் பணி ஒதுக்கீடு பெற்றார். அங்கு துணை வன அதிகாரியாக பணியாற்றிய பாலமுருகன், கடந்த 2010-ம் ஆண்டு திருச்சியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலராக பொறுப்பேற்றார்.
கடந்த 2013-ம் ஆண்டு விரைவாக பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பாஸ்போர்ட் புரஷ்கார் விருது மற்றும் அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததற்காக கடந்த 2012-ம் ஆண்டு சர்வதேச மனித உரிமை அமைப்பு வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இவருக்கு முன்பு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக இருந்த சி.செந்தில்பாண்டியன், தில்லியில் உள்ள மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.