

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிறுவர் மற்றும் சிறுமியர்களைக் கொண்டு நடத்தப்படும் குழந்தை கள் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி சிறார்களுக்கான மறு வாழ்வு இல்லங்கள் ஆகிய அனைத் தும், 2000-ம் ஆண்டு இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் 2006-ம் ஆண்டு திருத்தச் சட்டம் பிரிவு 34(3)-ன்படி சமூக நலத்துறை அல்லது சமூக பாதுகாப்புத் துறையில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அதேபோன்று ஏற்கெனவே பதிவு செய்த குழந்தை இல்லங்கள் தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இதுவரை பதிவு செய்யாத குழந்தை இல்லங்கள், திருவள் ளூரில் எண்.18, மா.பொ.சி. சாலையில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் (தொலைபேசி எண்: 044-27665595 மற்றும் 9444516987) தகவல்களை சமர் பிக்கவேண்டும்.
15 நாட்களுக்குள் தங்களது பதிவினை புதுப்பிக்காத மற்றும் பதிவு செய்யாத குழந்தை இல்லங்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.