இந்தியாவில் தொழில்நுட்ப உற்பத்தியை பெருக்க வேண்டும்: பாதுகாப்புத்துறை செயலாளர் பேச்சு

இந்தியாவில் தொழில்நுட்ப உற்பத்தியை பெருக்க வேண்டும்: பாதுகாப்புத்துறை செயலாளர் பேச்சு
Updated on
1 min read

உலகளவில் இந்தியா முதன்மை நாடாக வேண்டுமென்றால் தொழில்நுட்ப உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அவினாஷ் சந்தர் கூறியுள்ளார்.

சென்னை ஐஐடியின் 55-வது நிறுவன தின விழா ஐஐடி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடியில் படித்து உலகளவில் சிறந்து விளங்கும் 10 பேருக்கு ‘சிறந்த முன்னாள் மாணவர்’ விருதுகள் வழங்கப் பட்டன. மேலும் சென்னை ஐஐடியில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறையில் சிறந்து விளங்கியதற்காக 7 பேராசிரி யர்களுக்கும், சென்னை ஐஐடி சிறப்பாக இயங்க துணை புரிந்த தொழில்நுட்ப வல்லு நர்கள், உதவியாளர்கள் போன் றோருக்கும் விருதுகள் வழங்கப் பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய பாதுகாப்புத்துறை செயலாளரும், பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநருமான அவினாஷ் சந்தர் விருதுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்காக சென்னை ஐஐடி மிகப் பெரிய பங்காற்றியுள்ளது.

எத்தனையோ சாதனை யாளர்கள், மேதைகள் சென்னை ஐஐடியிலிருந்து உருவாகியிருக் கிறார்கள். உலகளவில் இந்தியா முதன்மை பெற வேண்டுமென்றால் தொழில்நுட்ப ரீதியான உற்பத் தியை அதிகப்படுத்த வேண்டும். ரோபாட்டிக்ஸ், ஆளில்லா விமானங்கள், நீர்மூழ்கி ஏவுகணை, உயிரி தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும்.

இதை சாத்தியப்படுத்துவதில் தொழில்நுட்ப மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். கல்வி என்பது படித்து தேர்வு எழுதுவது என்பதோடு மட்டுமில் லாமல் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் துணைபுரிய வேண்டும்.

கற்றல், கற்பித்தல் முறை களிலும் புது புது மாற்றங் களை புகுத்துதல் வேண்டும் என்று அவினாஷ் சந்தர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சென்னை ஐஐடியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in