

டி.சி.எஸ்.நிறுவனத்தில் ஆயிரக் கணக்கான தொழிலாளர் கள் நீக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நிறுவன அதிகாரி களிடம் தமிழக தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
டி.சி.எஸ்., தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஆயிரக்கணக் கானோர் பணி நீக்கம் செய்யப் படுவதாக, கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாயின. தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வேலை யிலிருந்து நீக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்நிலையில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் அதிகாரிகளை அழைத்து, தமிழக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சென் னையில் விசாரணை நடத்தினர். அப்போது டி.சி.எஸ்.நிறுவனத்தின் கடந்த ஆண்டுகளில் பணிக்கு சேர் ந்தோர், விடுபட்டோர் சதவீதப் பட்டியலை நிறுவ னத்தின் சார்பில் தாக்கல் செய்துள்ளனர்.
உலக அளவில் 0.8 சதவீதம் பேர் மட்டுமே வெளி யே சென்றுள்ளதாகவும், யாரை யும் கட்டாயப்படுத்தி வெளி யேற்றவில்லை.
ஆதாரப்பூர்வ புகார்கள் இருந்தால் விசாரிக்கலாம் என்றும் அவர்கள் விளக்கமளித் துள்ளனர்.
ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் புகார் அளிக்க வில்லை என்பதால், அவரது புகார் குறித்து மட்டும் அதிகாரப்பூர்வ விளக்கம் கேட்டுள்ளனர். நிறுவனச்சட்டத் திருத்தங்களின் படி நடந்து கொள்ளுமாறு, தமிழக அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி யதாக, தமிழக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.