

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீனாக மருத்துவர் ஆர்.நாராயண பாபு பொறுப்பேற்றார். குழந்தை யின் உடலில் தானாக தீக்காயங்கள் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதே தன்னுடைய முக்கியப் பணி என்று அவர் கூறினார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த மருத்துவர் குணசேகரன், திருவண்ணாமலை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை டீனாக பணியாற்றிய மருத்துவர் ஆர்.நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
டீனாக பொறுப்பேற்ற பிறகு மருத்துவர் நாராயணபாபு கூறிய தாவது: விழுப்புரம் மாவட்டம் நெடி மோழியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணா (26). கூலித் தொழிலாளி. இவரின் மனைவி ராஜேஸ்வரி (24). இவர்களின் பச்சிளம் ஆண் குழந்தையின் உள்ளங்கால்களில் தானாக தீக்காயங்கள் ஏற்படுகிறது. இந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளது. இவர்களின் மூத்த மகன் ராகுலுக்கு ஒன்றரை ஆண்டு களுக்கு முன்பு, இதேபோல உட லில் தானாக தீக்காயங்கள் ஏற்பட் டன. அந்த குழந்தை சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டது. அப்போது நான் இங்கு தான் பணியாற்றினேன். அந்த குழந் தைக்கு நான்தான் 21 நாட்கள் சிகிச்சை அளித்தேன். அந்தக் குழந்தைக்கு மொத்தம் 37 பரி சோதனைகள் செய்யப்பட்டன. ஆனால் குழந்தையில் உடலில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. தற்போது இவர்களின் அடுத்த குழந்தையும் இதே பிரச் சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தை யின் உடலில் தானாக தீக்காயங் கள் ஏற்படுவதற் கான காரணத்தை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சிப் பேன். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.