Published : 04 Jan 2015 11:53 AM
Last Updated : 04 Jan 2015 11:53 AM

விவசாயிகள் குழு நிரந்தர பயணத் திட்டம் நாளை தொடக்கம்: வேளாண் துறை அமைச்சர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தகவல்

தமிழக வேளாண் துறையின் விவசாயிகள் குழு நிரந்தர பயணத் திட்டம் வரும் 5-ம் தேதி (நாளை) முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்த, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கமுறை திட்டத்தின், விவசாயிகள் குழு நிரந்தரப் பயணத் திட்ட செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலை மையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

விவசாயிகள் குழு நிரந்தரப் பயணத் திட்டம் வேளாண் மற்றும் இதர சகோதரத் துறைகளின் பங்கேற்புடன், வரும் 5-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும். இத் திட்டம் வேளாண்துறை மூலம் 379 வட்டாரங்கள், 12,559 கிராம ஊராட்சிகள், 131 பேரூராட்சிகள், ஒரு நகராட்சி உள்ளிட்ட பயிர் சாகுபடி பகுதிகளைக் கொண்ட 16,624 பகுதிகளில் செயல்படுத் தப்படும்.

இதில் அம்மா பண்ணை மகளிர் குழுக்கள், பயிர் ஆர்வலர் கள், விவசாயிகள் பங்கேற்பர். மேலும் 39 உதவி வேளாண்மை அலுவலர்கள் நிரந்தரப் பயணத் திட்டமும் வரும் 5-ம் தேதி (நாளை) முதல் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இத்திட்டம் குறித்து வேளாண் இயக்குநர் மு.ராஜேந்திரன் பேசியதாவது: இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் திங்கள் முதல் வியாழன் வரையில், முதல் இரண்டு வாரங்களுக்கு 8 நாட்களும், எட்டு பகுதிகளுக்கு நிரந்தரப் பயணத்திட்டம் வகுக்கப்படும். மூன்றாம், நான்காம் வாரத் திலும் அதே பயணத் திட்டம் பின்பற்றப்படும்.

உதவி வேளாண்மை அலுவ லர்கள் குறிப்பிட்ட கிழமைகளில் இரு வாரத்துக்கு ஒரு முறை கிராமங்களுக்கு சென்று, விவசாயி கள் மற்றும் பண்ணை விளை பொருள் குழு உறுப்பினர்களை சந்தித்து, தொழில்நுட்ப பரவலாக்கம், உற்பத்தி அதிகரிப்பு குறித்து ஆலோசனை வழங்குவர். விளைபொருட்களை சந்தைப்படுத்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கமுறை ஜனவரி 5-ம் தேதி தொடங்கப்படு கிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன் பிருந்த பயிற்சி வழித் தொடர்புத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விவசா யிகள் குழு சார்ந்த நிரந்தர பயணத் திட்டமாக உருவாக்கப்பட் டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய அலுவலர்கள் இடையில் தொடர்பு வலுப்பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் அரசு இணைச் செயலர் செ.ராஜேந்திரன், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் சித்திரசேனன், வேளாண் வணிகத் துறை இயக்குநர் செ.மனோகரன், வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் மு.செந்தில் மற்றும் பலர் பங்கேற்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x