Published : 06 Jan 2015 02:02 PM
Last Updated : 06 Jan 2015 02:02 PM

கற்றல் குறைபாட்டுக்கு உணவே காரணம்: காந்திகிராமம் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை தாது உப்புகள் மற்றும் உயிர்ச் சத்துகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லை. அதன் பிறகு, கார்போஹைடிரேட், கொழுப்பு, புரதம் ஆகியன மட்டுமே வளர்ச்சியை உண்டாக்குவது இல்லை என்பதையும், தாது உப்பு களும், உயிர்ச் சத்துகளும் மனித னின் அனைத்து வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை எனவும் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தனர்.

தாது உப்புகள் குறைபாடு குழந்தைகளின் நினைவாற்றலைப் பாதிப்பதோடு, கற்றலில் குறை பாடு ஏற்படுவதற்கும் காரணமா கிறது என்கின்றனர் திண்டுக்கல் காந்திகிராமம் கிராமியப் பல் கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் அ. ஜாகிதாபேகமும், அவரது ஆராய்ச்சி மாணவி ப.நர்மதாஸ்ரீயும். தாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் குறித்து ‘தி இந்து’-விடம் அவர்கள் கூறியதாவது:

மனிதனுக்கு தேவையான தாது உப்புகள், அளவைப் பொருத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. கால்சி யம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கந்தகம், பொட்டாசியம், குளோ ரைடு முதலியன இன்றியமையாத சிறிய தாது உப்புகளாகும். இரும்பு, துத்தநாகம், செம்பு, சோடியம், கோபால்ட், புளோரைடு, மாங்கனீசு, குரோமியம், அயோடின், மாலிப்டீனம் போன்றவை மனித உணவூட்டத்துக்கு தொடர்புடைய மிக முக்கியமான தாது உப்புகளாகும்.

துத்தநாகமும் கற்றலும்

உயிர் செல்களுக்கிடையே உள்ள முக்கிய பொருள் துத்தநாகம். உடலில் இதன் மொத்த அளவு 2.3 கிராம். இது, எலும்புகளில் மிக அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. உடலின் பல்வேறு செயல்களை செவ்வனே செயல்பட வைக்கிறது.

துத்தநாகம் மூளையில் சேமிக்கப்பட்டு, கற்றல் மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்தும் மூளையின் பின்மேடு எனப்படும் ஹிப்போகேம்பஸ் பகுதியில் வெளியிடப்படுகிறது. மூளையில் புரதத்தின் வேலையைத் துரிதப்படுத்துகிறது.

துத்தநாக குறைபாட்டால், குழந்தைகளுக்கு கற்றல் திறன் தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. படிப்பில் அக்கறையின்மை, சோம்பல் மற்றும் மனநிலை பாதிக்கப்படுவதற்கான அபாயமும் உண்டு. துத்தநாகத்தின் குறைபாட்டை உணவூட்டத்தின் மூலம் சரி செய்ய முடியும்.

பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 15.5 மி.கி. துத்தநாகம் தேவை என்று உணவு வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு 2- 3 மி.கி., 8 வயது குழந்தைகளுக்கு 5 மி.கி., 9 வயது முதல் 14 வயதிலான குழந்தைகளுக்கு 8 மி.கி. துத்தநாகம் தினமும் தேவைப்படுகிறது.

துத்தநாக சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவைத் தடுக்கலாம்.

சத்துணவுப் பொருட்கள்

பூசணிக்காய் விதைகள், தர்ப்பூசணி பழ விதைகள், டார்க் சாக்லெட், பசலைக்கீரை, தீட்டப் படாத அரிசி, கோதுமை தவிடு, சோயாபீன்ஸ், பாதாம், காராமணி பருப்பு, ஆளிவிதை, காளான், நண்டு, செம்மறியாடு, மாட்டிறைச்சி, பூண்டு, வேர்க்கடலை, எள், முட்டையின் மஞ்சள் கரு, மாதுளை, அவகோடாஸ்.மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து நிறைந்த இது போன்ற உணவுகளை குழந்தை கள் சாப்பிடுவதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மாணவர் களின் கற்றலுக்கும் அவர்களது உணவூட்டத்துக்கும் துத்தநாகம் மிகுந்த தொடர்புடையது என்பதை உணர வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x