Published : 31 Jan 2015 09:52 AM
Last Updated : 31 Jan 2015 09:52 AM

பார்க்கிங் உரிமம் வழங்குவதில் மாநகராட்சியும், காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னையில் ஹோட்டல்கள், விடுதிகள் போன்றவற்றுக்கு கார் பார்க்கிங் உரிமம் வழங்குவதில் மாநகராட்சியும், காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த எஸ்.ரகு என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாரிமுனை, அண்ணா சாலை, தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் முக்கிய ஹோட்டல்களில் போதிய பார்க்கிங் வசதி இல்லை. இந்த ஹோட்டல்களுக்கு தினமும் ஆயி ரக்கணக்கானவர்கள் வந்து செல்வதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுபோன்ற ஹோட்டல் களைத் தொடங்கும் முன்பு, ஹோட் டல் திறக்கப்பட்டால் போக்கு வரத்து நெரிசல் இருக்காது என்பதை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உறுதி செய்ய வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாத ஹோட்டல்களை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்ச் கடந்த 19-ம் தேதி விசாரித்தது. இந்த வழக்கில் போக்குவரத்துத் துறை இணை ஆணையர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ஆகியோர் ஜனவரி 30-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, இரு வரும் நேற்று உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் நேற்று இந்த வழக்கை விசா ரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகர காவல் ஆணையர் சார்பில் போக்குவரத்து இணை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனு எங்களுக்கு அதி ருப்தி அளிக்கிறது. கார் பார்க் கிங் தொடர்பாக அடிமட்ட அள வில் உள்ள நிலை என்ன, இப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு காணலாம் என்பது பற்றி பதில் மனுவில் எதுவும் சொல்லப்படவில்லை. 2007-ம் ஆண்டு வரை உணவகங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் போன்ற வற்றில் கார் பார்க்கிங்குக்கு சென்னை மாநகர காவல் ஆணையரே உரிமம் வழங்கி யிருக்கிறார். அதன்பிறகு இந்த உரிமத்தை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது.

உணவகங்கள், விடுதிகள், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் கார் பார்க்கிங் வசதி அவசியம். எனவே, கார் பார்க்கிங் குக்கு உரிமம் வழங்கும் முன்பு அதுதொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட காவல்துறையிடம் இருந்து மாநகராட்சி பெற வேண் டும். பார்க்கிங் உரிமம் வழங்கு வதில் மாநகராட்சியும், காவல் துறையும் இணைந்து செயல் பட வேண்டும். போதிய கார் பார்க் கிங் வசதி இல்லாததால் ஹோட்டல்களை மூடுமாறு உத்தரவிட விரும்பவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறோம்.

எனவே, சோதனை அடிப்படை யில் குறிப்பிட்ட ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள வணிக நிறுவனங்கள், வாகனப் போக்கு வரத்து, கார் பார்க்கிங் வசதி, எவ்வளவு மக்கள் வந்து போகின்றனர் என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அந்தப் பகுதியின் திட்ட வரைபடம் மற்றும் புகைப்படத்துடன் ஒருங் கிணைந்த அறிக்கையை நீதிமன் றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மார்ச் 31-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x