

திருமாவளவன் மீதான் பேருந்து எரிப்பு வழக்கு விசாரணை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வந்த, அரசுப் பேருந்து 2000-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி, வளவனுார் அடுத்த லிங்காரெட்டிபாளையம் அருகே சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
பேருந்து நடத்துநர் அளித்த புகாரின் பேரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட 18 பேர் மீது வளவனுார் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
விழுப்புரம் சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணசாமி முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.