

தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 போலி மருத்துவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் முழுவதும் சுகாதாரத்தறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று மாவட்ட எஸ்பி லோகநாதன் உத்தரவின் பேரில் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸார் தனியார் மருத்துவ மனைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
முறையாக மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு சிகிச்சையளித்ததாக பாலக்கோடு அருகே கடகத்தூரில் சுப்ரமணி (30), பாப்பாரப்பட்டி வெங்கடேசன் (38), காரிமங்கலம் அருகே பேகராஅள்ளி சிவன், அதியமான்கேட்டை ஜெயமணி (38), கம்பைநல்லூர் அருகே கெலவள்ளி சரவணன் (46), பிரபு (46), கோட்டப்பட்டி சிலம்பரசன் (30), ஏ.பள்ளிப்பட்டி முருகன் (44), தொப்பூர் முனுசாமி (42), சங்கரன் (39), ஏரியூர் சிவகுரு (40), சீனிவாசன் (35) உட்பட 14 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்தனர்.