Last Updated : 17 Apr, 2014 10:39 AM

 

Published : 17 Apr 2014 10:39 AM
Last Updated : 17 Apr 2014 10:39 AM

சென்னையில் 102 வேட்பாளர்களில் 32 பேர் மட்டுமே செலவு கணக்கு தாக்கல்: குறைவாக கணக்கு காட்டியவர்களுக்கு நோட்டீஸ்

சென்னையில் உள்ள 3 மக்கள வைத் தொகுதிகளிலும் போட்டி யிடும் 102 வேட்பாளர்களில் 32 பேர் மட்டுமே முதல்கட்ட செலவுக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் சிலர் குறைவான செலவுக் கணக்கு காட்டியுள்ள தாக கூறி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் செலவுக் கணக்கை வாக்குப்பதிவுக்கு முன்பு 3 முறையும் தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் முழுமையான செலவுக் கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்திருந்தார்.

அதே நேரத்தில் அந்தந்தத் தொகுதிக்கான தேர்தல் ஆணை யத்தின் செலவுக் கணக்கு பார்வை யாளர்கள், வேட்பாளர்களின் பிரச்சாரம் உள்ளிட்ட செலவு களை தனியாக கணக்கிட்டு வருகின்றனர். வேட்பாளர் தாக்கல் செய்யும் கணக்கை, தாங்கள் தயாரித்து வைத்துள்ள கணக்குடன் பார்வையாளர்கள் ஒப்பிட்டு சரி பார்ப்பர். அதில் வித்தியாசம் இருந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் ஏப்ரல் 12, 17, 23 ஆகிய தேதிகளிலும், மத்திய சென்னை வேட்பாளர்கள் ஏப்ரல் 13, 17, 21 ஆகிய தேதிகளிலும், வட சென்னை வேட்பாளர்கள் 12, 16, 21 ஆகிய தேதிகளிலும் தற்காலிக செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 3 தொகுதிகளுக்கான முதல்கட்ட செலவு தாக்கல் செய்யும் தேதி முடிந்துவிட்டது.

இந்நிலையில், சென்னை யில் போட்டியிடும் 102 வேட் பாளர்களில் 32 பேர் மட்டுமே செலவுக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதில் 16 சுயேச்சைகள் அடக்கம். செலவுக் கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும் செலவுக் கணக்கு தாக்கல் செய்துவிட்டனர். ஆம் ஆத்மி கட்சியின் தென் சென்னை வேட்பாளரும், தேமுதிக மத்திய சென்னை வேட்பாளரும் இன்னும் கணக்கு தாக்கல் செய்யவில்லை.

மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனின் தேர்தல் செலவு கணக்கு ஏப்ரல் 4 முதல் 9-ம் தேதி வரை 61 லட்சத்து 64 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது என்று தேர்தல் இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள கணக்கில் 11-ம் தேதி வரை 44 ஆயிரத்து 630 ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளதாக கூறியிருந்தார்.

அதேபோல மத்திய சென்னை அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரின் தேர்தல் செலவுகள், ஏப்ரல் 4 முதல் 9 வரை ரூ.34 லட்சத்து 87ஆயிரத்து 428 என தேர்தல் இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால், 12-ம் தேதி வரையிலான தனது செலவு கள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 932 ரூபாய் என்று வேட்பாளர் கணக்கு தாக்கல் செய்துள்ளார்.

தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக வேட்பாளர் இல.கணேசன், காங்கிரஸ் வேட்பாளர் ரமணி ஆகியோர் தாக்கல் செய்துள்ள செலவுக் கணக்கு முரண்பாடாக உள்ளதாக செலவுக் கணக்கு பார்வையாளர் தெரிவித்துள்ளார். அதேபோல வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடேஷ்பாபுவும் செலவுக் கணக்கை குறைத்துக் காட்டியுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் கணக்கும், தேர்தல் செலவுக் கணக்கு பார்வை யாளரின் கணக்கும் வித்தியாசப் படுவதால், சம்பந்தப்பட்ட வேட் பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x