

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்து வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா இடையே நிலை கொண்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், உள்மவாட்டங்கள் ஒருசில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.