Published : 26 Apr 2014 09:23 AM
Last Updated : 26 Apr 2014 09:23 AM

தேர்தல் நடத்தை விதிகள் மே 28 வரை அமலில் இருக்கும்: தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேட்டி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே 28-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயல கத்தில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது வெகு சில இடங்களில் மட்டும் பிரச்சினை ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள் ளன. அதைப் பற்றி மத்திய பார்வை யாளர்கள் விசாரித்து வருகின்றனர். அந்த வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டால், அதுபற்றி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்புவார்கள். அவர்கள் முடிவு செய்து எங்களுக்கு தகவல் தெரிவிப்பர்.

தஞ்சை தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஒரு அதிகாரி திறந்து பார்த்தது தொடர்பான புகார் பற்றி பார்வையாளர் விசாரித்து வருகிறார். வாக்குப்பதிவு நாளில் தேர்தல் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு 2,514 புகார்கள் வந்தன.

முதல்வர், அமைச்சர்களுக்கு தடை

தேர்தல் முடிந்துவிட்டாலும், நடத்தை விதிகள் அமலில் உள்ளன. முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசு வாகனங்களில் அரசு அலுவலகத்துக்குச் செல்லலாம். ஆனால், கட்சி நிகழ்ச்சிகள், கட்சி அலுவலகத்துக்குப் போகக் கூடாது.

தேர்தல் நடத்தை விதிகள் மே 28 வரை அமலில் இருக்கும். வாக்குப்பதிவு முடிந்த ஒரு சில நாள்களில் இதை தளர்த்தவும் வாய்ப்பு உண்டு.

சென்னை உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு குறை வாக இருந்தது. எங்களால் முடிந்த அளவு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண் டோம். வாக்களிக்கும் படி மக்களை கட்டாயப்படுத்த முடியாது. வாக்களிப்பது மக்களின் உரிமை. அதேநேரத்தில், வாக்களிக்காமல் இருப்பதுகூட அவர்களது உரிமை தான். தேர்தல் நாளில் திறந்திருந்த நிறுவனங்கள் பற்றி 5 புகார்கள் வந்துள்ளன. விசாரணைக்குப் பின்னர் அந்நிறுவனங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பாளர்கள் தங்கள் செலவுக் கணக்கை தேர்தல் முடிவு வந்த ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் 42 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. அங்கு வேட்பாள ருக்கு தலா 3 ஏஜென்ட்கள் வீதம் சுழற்சி முறையில் தங்கலாம். இந்தத் தேர்தலில், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித் துள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையும் 1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், இம்முறை வாக்கு எண்ணிக்கை சற்று தாமத மாகும். வேட்பாளர்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் முடிவுகள் வெளி யாவதில் மேலும் தாமதமாகும்.

மே 16-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில், தபால் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பதிவான வாக்குகள், தனி அறை யில் வைத்து எண்ணப்படும்.

ஒரு அறையில் 14 மேசை கள் இருக்கும். ஒரு மேசைக்கு கண்காணிப்பாளர், எண்ணிக்கை உதவியாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் ஆகியோர் இருப்பர். இதுதவிர, தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தனி மேசை இருக்கும். அதிலும் சில உதவியாளர்கள் இருப்பர்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

பெயர் சேர்க்கலாம்

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டிருப்பதாக தேர்தல் நாளன்று சில புகார்கள் வந்தன. பெயர் விடுபட்டவர்கள், புதிதாக பெயர் சேர்க்க நினைப்பவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அந்தந்த தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மனு செய்யலாம். இதுதவிர ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x