Published : 28 Jan 2015 10:41 AM
Last Updated : 28 Jan 2015 10:41 AM

காஞ்சிபுரம் நகர்மன்றத்தில் கூச்சல், குழப்பம்: தனியார் நிலத்துக்கு சாலை அமைக்க எதிர்ப்பு - நகர்மன்றத் தலைவர் பதில் அளிக்காததால் வாக்குவாதம்

தனியார் நிலத்துக்கு சாலை அமைக்க அனுமதி கொடுத்தது தொடர்பான கேள்விக்கு, நகர் மன்றத் தலைவர் மவுனம் சாதித்த தால், திமுக-அதிமுக கவுன்சிலர் கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்ட அரங்கில் கூச்சல், குழப்பம் நிலவியது.

மேலும், பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள திறந்தவெளிக் கடைகளை, அனைத்து வியாபாரி களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சியின் சாதாரண கூட்டம், நகர்மன்றத் தலைவர் மைதிலி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணை யர் சர்தார் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும், தீர்மானங் கள் வாசிக்கப்பட்டன. அப்போது, 51-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகன், ‘தாயார் குளம் பகுதியில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை இன்னும் பயன்பாட்டுக்கு வராதது ஏன்? பாலாற்றுப் பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றைப் பாரா மரிக்க ரூ. 1.6 லட்சம் நிதி ஒதுக் கப்பட்டது ஏன்? 41-வது வார்டு பகுதியில் வீட்டுமனைகளாக பிரிக் கப்படாத தனியார் நிலத்துக்கு சாலை அமைக்க எந்த அடிப்படை யில் அனுமதி அளிக்கப்பட்டது?’ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

44-வது வார்டு திமுக கவுன்சிலர் சுரேஷ், ‘தேனம்பாக்கம் பகுதியில் கழிவுநீர் உந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் இடியாத நிலையில், அதை சீரமைத்து பராமரிப்புப் பணி கள் மேற்கொள்ள ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது ஏன்? சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரி சல் ஏற்படுவதைத் தவிர்க்கவே பேருந்து நிலையத்தின் வடக்குப் பகுதியில் புதிதாக திறந்தவெளிக் கடைகள் அமைக்கப்பட்ட நிலை யில், பூக்கடைகளுக்கு மட்டும் அனு மதி அளிக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இதனால், பணி மேற்கொண்டதன் நோக்கம் நிறை வேறாமல், தள்ளுவண்டிகள் மற் றும் பழக்கடைகள் ஆகியவற்றால் மீண்டும் பேருந்து நிலையச் சாலை ஆக்கிரமிக்கப்படும் சூழல் உரு வாகியுள்ளது. எனவே, அங்கு அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க வேண்டும்’ என்றார்.

தேமுதிக கவுன்சிலர் சண்முகம் மற்றும் திமுக கவுன்சிலர்கள் 3 பேர், ‘பேருந்து நிலையத்தின் மிக அருகிலேயே பூ வியாபாரிகளுக் கென தனி சத்திரம் உள்ளது. இந்த நிலையில், பேருந்து நிலையத்தின் உள்ளே பூக்கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிப்பது ஏற்புடைய தல்ல’ என்றனர்.

நகராட்சிப் பொறியாளர் சுப்பு ராஜ் கூறும்போது, ‘தேனம்பாக்கம் கழிவுநீர் உந்து நிலையத்தின் சுற்றுச் சுவர் சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பாது காப்பு காரணங்களுக்காக அதை சீரமைக்கவுள்ளோம்’ என்றார்.

தொடர்ந்து, நகர்மன்றத் தலை வர் பேசியதாவது: தாயார் குளம் எரிவாயு தகன மேடையின் பணி கள் இன்னும் நிறைவடைய வில்லை. பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் பராமரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில் முதற்கட்ட மாக பூக்கடை வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கப்படும். வேறு பகுதியில் கடைகள் அமைத்து, மற்ற வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தனியார் நிலத்துக்கு சாலை அமைத்தது குறித்த கேள்விக்கு மட்டும் நகர்மன்றத் தலைவர் பதில் அளிக்காமல் மவுனமாக இருந்தார். இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கு மாறு திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இவர் களுக்கு எதிராக அதிமுக உறுப் பினர்கள் பேசினர். இதனால் கூட்ட அரங்கில் கூச்சல், குழப்பம் நிலவியது. அதைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் மைதிலி கூட்ட அரங்கிலிருந்து வெளியே சென்றுவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x