

கோவை மாவட்டம் ஈச்சநாரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் திடீரென்று மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
மாணவர்களிடையே மோதல் வலுத்ததால், கார்த்திக் எனும் மாணவர் காயமடைந்தார். தற்போது காயமடைந்த மாணவர் கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.