

மனுதாரர்களை உட்கார அனு மதிக்காத மாநிலத் தகவல் ஆணை யம் முன், நேற்று சட்டப் பஞ்சா யத்து இயக்கத்தினர் நாற்காலிகளைை தூக்கிப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்து தகவல் கேட்கும் மனுதாரர் களை, தகவல் ஆணையர்கள் உட்கார அனுமதிக்காமல் குற்ற வாளிகள்போல நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவரை 2 நாட்களுக்கு முன் போலீஸார் கைது செய்தனர்.
தகவல் ஆணையர்களின் செயல்பாடுகளைக் கண்டித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அதேபோல, மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் முன்னாள் அரசு செயலர் எம்.ஜி. தேவசகாயம், அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கீதா ராமகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தேர்தல் ஆணையர் டி.கே. ஒசா, முனைவர் சண்முக வேலாயுதம், கல்வியாளர் க்ளாஸ்டன் சேவியர், வழக்கறிஞர் அஜிதா, லோக் சத்தா கட்சி நிர்வாகி ஜெகதீசன், காந்திய வாதி சசிபெருமாள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதேபோல, ஓய்வு பெற்ற அரசு அதிகாரியும், தகவலறியும் ஆர்வலருமான நங்கநல்லூர் வி. ராமாராவ் அனுப்பியுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையத்தில் தகவல் கேட்கச் சென்றபோது, 72 வயது நிறைந்த என்னையும் நாற்காலியில் இருந்து எழுந்து நிற்குமாறு கட்டாயப்படுத்தினர். காலனி ஆதிக்க நாடுகளில்கூட குற்றவியல் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு நாற்காலி கொடுத்து விசாரணை நடக்கிறது. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையின்படி நிறுவப்பட்ட ஆணையம் மோசமாக நடந்து கொள்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மாநில தகவல் ஆணையம் முன் நாற்காலிகளைத் தூக்கிப் பிடிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. காந்தியவாதி சசிபெருமாள், சட்டப் பஞ்சாயத்து இயக்க பொதுச் செயலர் செந்தில் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது, செந்தில் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:
குற்றவியல் நீதிமன்றங்களைப் போல தகவல் ஆணையம் தனது அதிகார எல்லையை மீறி செயல் படுகிறது. வெளிப்படைத்தன் மைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு, எதேச்சதிகாரமாக இயங்குவது வேதனையானது. தகவல் ஆணையர்கள் மனுதாரர்களை உட்கார அனுமதிப்பதில்லை. ஆணையர் தமிழ்ச்செல்வன் வரம்பு மீறி ஒருமையில் பேசுகிறார். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.