

மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இன்று (சனிக்கிழமை) திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மீத்தேன் எரிவாயு ஒப்பந்தத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளுக்கு வணிகர் சங்க பேரமைப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.