சென்னையில் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் கவனக் குறைவு

சென்னையில் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் கவனக் குறைவு
Updated on
2 min read

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் நேற்று முன்தினம் பன்றிக்காய்ச்ச லால் உயிரிழந்த ரயில்வே ஊழியர் சீனிவாசனின் (53) உடல் எவ்விதமான சுகாதார விதி முறைகளையும் பின்பற்றாமல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சலால் உயிரிழந் தவரின் உடலை அடக்கம் செய்யும் முறை குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரும், தமிழக பொது சுகாதார சங்கத்தின் தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:

பன்றிக்காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்தால், இந்த தகவலை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அல் லது நகராட்சிக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். இறந்தவரின் உடலில் இருந்து நோய் தொற்று கிருமியை நீக்கி, உடலை பிரத்தியேகமான பையில் பேக் செய்ய வேண்டும். அதன்பின் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே, உடலை உறவினர்களிடம் மருத்துவ மனை நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும்.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில், அவர்களின் ஆலோசனைப்படி சுகாதார விதிகளை முறையாக பின்பற்றி உடலை புதைக்கவோ அல்லது எரியூட்டவோ வேண் டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைசி வரை இருந்து கண்காணிக்க வேண்டும். முன்னதாக உறவினர்கள் உடலை தொடுவது, தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டுவது கூடாது.

சாதாரணமாக இறந்தவரை புதைப்பதற்காக தோண்டப் படும் பள்ளத்தைவிட, பன்றிக்காய்ச் சலால் இறந்தவரை புதைக்க இன்னும் ஆழமாக தோண்ட வேண்டும். பள்ளத்தில் முதலில் சுட்ட சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் போட வேண்டும். பின்னர் உடலை வைத்து அதன் மீதும், பக்க வாட்டிலும் மீண்டும் பிளீச்சிங் பவுடரை போட வேண்டும். கடைசி யாக சுற்றிலும் பினாயிலை தெளிக்க வேண்டும். அந்த இடத்தை சுற்றிலும் 6 அடிக்கு வேறு எந்த உடலையும் புதைக்கக்கூடாது. நீர்நிலைகளின் அருகில் உடலை புதைக்கக் கூடாது.

தகனம் செய்யும் விதிமுறை

பன்றிக்காய்ச்சலால் உயிரிழந் தவரின் உடல் முழுவதும் சாம்ப லாகும் வரை எரியூட்ட வேண்டும். மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் பயன்படுத்தலாம். மின் தகன மேடையில் எரியூட்டுவது மிகவும் சிறந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் விமலா கூறும்போது, “பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்த தகவலை சென்னை மாநகராட்சிக்கு தெரி வித்துவிட்டோம். அதன்பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தோம்” என்றார்.

“பன்றிக்காய்ச்சலால் ஒருவர் இறந்தார் என்ற தகவல் வந்துள்ளது. அதுபற்றி விசாரித்து வருகிறோம்” என்று சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையர் ஆனந்த் கூறினார்.

சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் ஜெகதீ சன் கூறும்போது, “பன்றிக்காய்ச்சலால் ஒருவர் இறந்தது பற்றி சரியாக தகவல் கிடைக்கவில்லை. எங்களு டைய முன்னிலையில்தான் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எங்கள் ஆலோசனைப்படிதான் அடக்கம் செய்ய வேண்டும்.

ஆனால், எங்களுக்கு தெரியாமல் உடலை உறவினர் களிடம் ஒப்படைத்துவிட்டனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். உறவினர்கள் உடலை அடக்கம் செய்துவிட்டதால், அவர்களில் யாருக்காவது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு நடத்துவோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in