

இலங்கை அரசியல் சட்ட 13வது திருத்தம் அமலாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு அளித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு கூடுதல் உரிமைகள் அளிக்கும் 13-வது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
''13-வது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்பது வரவேற்கத்தக்கது. இதை எழுத்திலும் செயலிலும் இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும்.
போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு தர இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்'' என்று ஜி.கே வாசன் தெரிவித்தார்.