

கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்ட ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 2004-ல் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தனர். 18 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு கடந்த ஜூலை 30-ல் தஞ்சை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் கூடுதல் இழப்பீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கடராமன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 94 குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் வழக்கறிஞர் தமிழரசன் மூலம் ஆணையத்திடம் இழப்பீடு கோரும் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்
இதுதொடர்பாக ஜனவரி 9-ல் கும்பகோணத்தில் உள்ள பொதுப் பணித்துறை திட்ட இல்லத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜ ராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.