கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
Updated on
1 min read

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நேற்று தொடங்கியது.

இந்த அணு உலையில் வணிகரீதியில் மின் உற்பத்தி செய்வதற்கு அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12.01 மணியிலிருந்து மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அணு உலை வளாகத்தில் உள்ள சுவிட்ச் யார்டு பகுதியில் கடந்த 14-ம் தேதி இரவு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரியாக்டரும், டர்பைனும் இயங்கவில்லை.

இது சிறிய அளவிலான தொழில்நுட்பக் கோளாறுதான் என்றும், ஓரிரு நாளில் சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

அதன்படி தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு நேற்று பகல் 1.01 மணியளவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. பிற்பகல் 3 மணியளவில் மின் உற்பத்தி 100 மெகாவாட்டை எட்டியது.

24 மணிநேரத்தில் மின் உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in