

கூட்டுறவு ரேஷன் கடைகளில், வரும் 14-ம் தேதி வரை தங்குதடையின்றி பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொது விநியோகத் திட்டத் தின் கீழ் ரேஷன் கடைகளில் அத்தியா வசியப் பொருட்களை குடும்ப அட்டை தாரர்களுக்கு, தங்குதடையின்றி வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது அதிகாரிகளிடம் அமைச் சர் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப் படும், விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள், தங்கு தடையின்றியும், சரியான அளவிலும், அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக வரும் 14-ம் தேதி வரை அனைத்து பொது விநியோகத்திட்ட பொருட்களும், மக்களுக்கு சிரம மின்றி வழங்குவதை அனைத்து களப் பணியாளர்களும், ரேஷன் கடை களுக்கு நேரில் சென்று கண்காணிக்க வேண்டும்.
இதன் மூலம் பொதுமக்கள் அனை வரும், பொங்கல் பண்டிக்கைக்கு முன்பாகவே, அனைத்து அத்தியா வசியப் பொருள்களையும் பெற்று பயனடைய வழிவகை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் அனைத்து நியாய விலைக் கடைகளும், குறித்த நேரத் தில் திறக்கப்பட வேண்டும். அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து பொருட்களையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யவேண்டும். இதில் முறைகேடு ஏதேனும் இருப்பின் சம்பந்தப் பட்ட விற்பனையாளர் மற்றும் அலுவலர் கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.