Published : 28 Jan 2015 10:52 AM
Last Updated : 28 Jan 2015 10:52 AM

போலி வாக்காளர்களை கண்டறிய ஸ்ரீரங்கத்தில் வாக்காளர் பட்டியலுடன் சோதனை நடத்த வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்களை கண்ட றிய வாக்காளர் பட்டியலுடன் சோதனை நடத்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சட்டத்துறை இணைச் செயலாளர் கிரிராஜன், பரந்தா மன் உள்ளிட்டவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித் துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் தயார் செய்யப் பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் நிறைய குளறுபடிகள் உள்ளன. இது தொடர்பாக ஏற்கெனவே மனு அளித்திருந்தோம்.

வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர், முகவரி போன்றவை 2 இடங் களில் இருந்தன. மேலும் வெளியூர் சென்றவர்கள், இறந்தவர்கள் பெயரும் வாக்கா ளர் பட்டியலில் இருந்தது. இதனை கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதியே தெரியப்படுத்தி யிருந்தோம்.

இந்த சூழலில் ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் 13-ம் தேதி நடக்கவுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் 9000 போலி வாக்காளர்கள் இருப்பது தொடர்பாக கடந்த 19-ம் தேதி மனு அளித்திருந்தோம்.

அதற்கான சான்றுகளை அளித்து போலி வாக்காளர் களை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.

இதன்படி, போலி வாக்காளர் களை டிஜிட்டல் முறைப்படி கண்டறிந்து நீக்கிவிடுவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் ஒரு வார காலமாகியும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக் கப்பட்டதாக தெரியவில்லை.

எனவே, போலி வாக்காளர் களை கண்டறிய வாக்காளர் பட்டி யலுடன் சோதனை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் முறையாக தேர்தல் நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x