Published : 02 Jan 2015 10:04 AM
Last Updated : 02 Jan 2015 10:04 AM

2014-ம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.1,016 கோடிக்கு மது விற்பனை

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.1,016 கோடிக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையாகி புதிய இலக்கை எட்டியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 277 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் தினந்தோறும் சராசரியாக ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகின்றன. மாநில அளவில் மதுபானங்கள் விற் பனையில் வேலூர் மாவட்டம் முதல் 5 இடங்களில் உள்ளது. குறிப்பாக புத்தாண்டு, பொங்கல், தீபாவளி மற்றும் முக்கிய விழாக் காலங்களில் மதுபான பாட்டில் களின் விற்பனையில் திட்டமிட்ட இலக்கு எட்டப்படும்.

2014-ம் ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி மட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான மதுபான விற்பனையின் மூலம் ரூ.3.90 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 7,300 பெட்டி ஹாட் வகை பாட்டில்கள், சுமார் 3,400 பெட்டி பீர் பாட்டில்கள் விற்பனையாகி உள்ளன. இது, கடந்த 2013-ம் ஆண்டைக் காட்டிலும் விற்பனையில் 8 சத வீதம் சரிந்துள்ளது. ஆனால், மது பானங்களின் விலை உயர்வு காரணமாக விற்பனை குறைந் தாலும் சுமார் ரூ.40 லட்சம் கூடுத லாக வருவாய் கிடைத்துள்ளது.

2013-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி புத்தாண்டு கொண்டாட்ட நாளில் மட்டும் 7,787 பெட்டி ஹாட் வகை மதுபாட்டில்கள், 3,994 பெட்டி பீர் பாட்டில்கள் விற்பனையாகி ரூ.3.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

10 லட்சம் பெட்டி பீர் பாட்டில்கள் விற்பனை

இதற்கிடையில், கடந்த ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை புதிய இலக்கை எட்டியுள்ளது. சுமார் 22 லட்சம் பெட்டி ஹாட் வகை மதுபாட்டில்கள், 10 லட்சம் பெட்டி பீர் பாட்டில்கள் விற்பனையானதில் அரசுக்கு ரூ.1,016 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2013-ம் ஆண்டில் சுமார் ரூ.890 கோடி வருவாய் கிடைத்தது. வேலூர் மாவட்டம் முதல் முறையாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி என்ற விற்பனை அளவை டாஸ்மாக் எட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x