Published : 03 Apr 2014 01:12 PM
Last Updated : 03 Apr 2014 01:12 PM

இ.ம.க., இந்து மகாசபா 30 தொகுதிகளில் போட்டி: 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இந்து மக்கள் கட்சியும் அகில பாரத இந்து மகாசபை கட்சியும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து இரு கட்சிகளும் இணைந்து புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்து மக்கள் கட்சியும் அகில பாரத இந்து மகாசபாவும் இணைந்து தமிழகத்தில் 30 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஏற்கெனவே 15 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளோம்.

இப்போது 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி நீலகிரி காமராஜ், பொள்ளாச்சி சசிமான், திருப்பூர் செந்தில்குமார், நாமக்கல் கிருஷ்ணன், சேலம் கணேசன், வேலூர் சுந்தரமூர்த்தி, தென்சென்னை காளிமுத்து, கன்னியாகுமரி சுரேஷ், கோவை சுபாஷ் சாமிநாதன் ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x