பணிநீக்க முயற்சியை கண்டித்த தொழிலாளி மீது தாக்குதல்: தனியார் ஆலையில் உள்ளிருப்பு போராட்டம்

பணிநீக்க முயற்சியை கண்டித்த தொழிலாளி மீது தாக்குதல்: தனியார் ஆலையில் உள்ளிருப்பு போராட்டம்
Updated on
1 min read

தனியார் ஆலையில் நிரந்தர தொழிலாளர்களை பணி நீக் கம் செய்யும் நிர்வாகத்தின் முயற்சியை கண்டித்த தொழிலாளி தாக்குதலுக்கு ஆளானார். இதைக் கண்டித்து சக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதி யில் உள்ளது என்.வி.ஹெச். இண்டியா தொழிற்சாலை.கார் உதிரிபாகம் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் 120 பேர் நிரந்தர பணியாளர்கள். இவர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு புதிதாக ஒப்பந்த அடிப்படையிலும் அப்பரண்டீ ஸாகவும் ஆட்களை நியமிக்க தொழிற்சாலை நிர்வாகம் திட்ட மிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் எந்த நேரமும் பணி யில் இருந்து நீக்கப்படலாம் என்ற அச்சத்துடன் நிரந்தர தொழிலாளர் கள் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு கம்பெனி சேர்மனிடம் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப் போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பூபாலன் என்பவரை சேர்மன் அடித்து உதைத்ததாக கூறப்படு கிறது. இதில் காயமடைந்த அவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இதைக் கண்டித்து சக தொழிலாளர்கள் தொழிற் சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலின்பேரில் வந்த தொழி லாளர் நலத்துறை உதவி ஆணையர் தர்மசீலன் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பகிரங்க மன்னிப்பு கேட்க ஆலை சேர்மன் மறுத்துவிட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இன்றும் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

தாக்குதல் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸில் தொழிலாளர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: 5 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்பதால், நிரந்தர தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய நிர்வாகம் முயன்று வருகிறது. முதல் கட்டமாக பணி பாதுகாப்பு வேண்டி தொழிற்சங்கத்தில் இணைந்ததற்காக 2 பேரையும் வேறு சில பொய்யான காரணங் களைக் கூறி 13 பேரையும் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

மேலும் ஒப்பந்த அடிப்படை யில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத் தட்டி கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆலை யின் சேர்மன், பூபாலன் என்ற தொழிலாளியை தாக்கினார். குண்டர்களை ஏவி அவரை வெளியேற்றினார். இச்சம்பவம் குறித்து புகார் அளித்தும் இதுவரை போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in