

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் உள் நாட்டிலேயே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர் கள் தங்கள் சொந்த ஊர்களுக்கோ, வீடுகளுக்கோ திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலை யில் தமிழகத்திலுள்ள அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது, அவர்களை கொலைக் களத்துக்கு அனுப்புவது போன்றது. இந்த விவகாரத்தில் இலங்கை அரசு காட்டும் அவசரத்துக்கு பின்னணி உள்ளது.
மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்களின் வலிமையை குறைக் கும் விதமாக, அவர்களை அந்நாட் டில் இருந்து வெளியேற்ற திட்டமிடப் பட்டுள்ளது. அதன் முன்னோட்ட மாக இந்தியாவில் இருக்கும் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வெற்றிபெற்றால் மேற்கு நாடு களும் அந்நாட்டு அகதிகளை திருப்பி அனுப்பத் தொடங்கிவிடு வார்கள் என்பது இலங்கை அரசின் திட்டம். அதற்கு இந்திய அரசு துணைபோகக் கூடாது.