2015-ம் ஆண்டுக்கான உள்தாள் இணைக்கும்போது ரேஷன் பதிவேட்டில் கையெழுத்து போலிகளை களைய நடவடிக்கை

2015-ம் ஆண்டுக்கான உள்தாள் இணைக்கும்போது ரேஷன் பதிவேட்டில் கையெழுத்து போலிகளை களைய நடவடிக்கை
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 தாலுக்காவில் 5,69,939 அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் அந்யோஜன, அன்னயோஜனா திட்டத்தில் 64,709 குடும்ப அட்டைகள், 17,572 சர்க்கரை அட்டைகள், 1,960 காவலர் குடும்ப அட்டைகள், 842 பொருட்கள் பெறாத அட்டைகள் என மொத்தம் 6,55,022 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் போலி குடும்ப அட்டைகள் தொடர்பாக மாவட்டம் வழங்கல் நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதனால், போலி குடும்ப அட்டைகளை பிடிப்பதற்காக மாவட்ட வழங்கல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது குடும்ப அட்டைகளில் 2015-ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் போலி குடும்ப அட்டைகளை கண்டுபிடிப்பதற்காக ரேஷன் கடைகளில் உள்தாள் வழங்கும் விற்பனையாளர்கள் சம்பந்தப்பட்ட அட்டைதாரரிடம் பதிவேட்டில் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

இதன் மூலம், போலி குடும்ப அட்டைகளை கண்டுபிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல்துறை அலுவலர் பவணந்தி கூறியதாவது: போலி ரேஷன் அட்டைகளை கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.

குடும்ப அட்டையில் பெயர் இல்லாத பதிவேட்டில் கையெழுத்திட முடியாது என்பதால் போலி குடும்ப அட்டைகளை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

இந்த பணிகள் முடிந்த பிறகுதான் போலி அட்டைகள் குறித்த விவரம் தெரிய வரும். போலி குடும்ப அட்டைகளுக்காக அரசியல் பிரமுகர்கள் சிபாரிசு செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களிடமும், குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் நேரில் வராமல் சிபாரி சின் பேரில் உள்தாள் வழங்கக் கூடாது என கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளோம். தாலுகாவாரியாகவும் போலி அட்டை கண்டுபிடிக்கும் சோதனை நடத்தப்படுகிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in