Last Updated : 22 Jan, 2015 11:58 AM

 

Published : 22 Jan 2015 11:58 AM
Last Updated : 22 Jan 2015 11:58 AM

பொதுத்துறை நிறுவனங்களுக்கு 36 சுரங்கங்களை ஒதுக்கியது அரசு

ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கும் பணியை அரசு ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக 36 சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஒதுக்கப்பட்ட 36 சுரங்கங்களில் ஒன்று மட்டும் உருக்கு நிறுவனத்துக்கு அளிக்கப்பட் டுள்ளது. மற்றவை மின் நிறு வனங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக நிலக்கரித்துறைச் செயலர் அனில் ஸ்வரூப் தெரிவித்தார்.

36 நிலக்கரி சுரங்க பகுதிகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்த விவரத்தை அளித்து வருகிறோம். இந்தப் பட்டியலில் மேலும் சில சுரங்கங்கள் சேர்க்கப்படலாம். தேவைக்கேற்ப இந்த நடவடிக்கை இருக்கும். மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை அடிப்படையில் இந்த ஒதுக்கீடு அமையும் என்று அவர் மேலும் கூறினார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழிகாட்டு முறைகளை நிலக்கரித்துறை அமைச்சகம் வகுத்துள்ளது. ஏற்கெனவே இந்த நிலக்கரி சுரங்கங்களை பெற்றுள்ள நிறுவனங்கள் அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிலக்கரி சுரங்கங்களுடன் இணைந்த சில பொதுத்துறை நிறுவனங்ளும் உள்ளன. இத்தகைய நிறுவனங்கள் அவற்றை ஒப்படைத்துவிட்டு புதிதாக நிலக்கரி சுரங்க அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அவற்றை அளிப்பதால் நிலக்கரி தேவைப்படும் பிற நிறுவனங்களுக்குத் தேவையான நிலக்கரியை கோல் இந்தியா வழங்க முடியும் என்று குறிப்பிட்டார்.

சுரங்க ஒதுக்கீடு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் அரசு பிப்ரவரி மாதத்திற்குள் பூர்த்தி செய்யும் என்று ஸ்வரூப் குறிப்பிட்டார்.

புதிதாக நிலக்கரி சுரங்கங்களை ஏற்படுத்துவது தொடர்பான ஏலம் பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 22 வரை நடைபெறும். இவற்றுக்கான ஒப்பந்த ஆணை மார்ச் 23-ல் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய சுரங்க அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் 3 சுரங்கங்களுக்கான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வருகின்றன. மொத்தமுள்ள 101 சுரங்கங்களில் 98 சுரங்கங்களில் நிலக்கரி கிடைக்கும் என நம்புவதாக அவர் கூறினார். பிரிவு 2-ல் உள்ள சுரங்கங்களை ஏலத்தில் எடுக்க 87 நிறுவனங்கள் மொத்தம் 224 விண்ணப்பங்களை வாங்கியுள்ளன. பிரிவு 3-க்கான சுரங்கத்துக்கு நிறுவனங்கள் 82 விண்ணப்பங்களை வாங்கி யுள்ளன.

சுரங்க பகுதிகளை அடை யாளம் காண்பதற்கு அந்தந்த பகுதிகளுக்குச் செல்ல அனுமதி கோரி 167 கோரிக்கைகள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x