

எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது எழுத்துரிமையை மீறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறியுள்ளார்.
‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பான விவகாரத்தில் பெருமாள் முருகனுக்கு ஆதர வாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ஆர்.நல்லகண்ணு பேசிய தாவது: ஒவ்வொரு கலைஞ னுக்கும் எழுத்துரிமையும், பேச்சுரிமையும் அவசியம். பெருமாள் முருகன் தனக்கான உரிமைகளை மீறவில்லை. சாதி, மத வன்முறைகள் குறித்து எழுதியுள்ளார். தமிழக அரசே மறந்துவிட்ட உ.வே.சாமிநாத ஐயரின் எழுத்துகளை தொகுத்துள்ளார்.
திருச்செங்கோடு பகுதியின் வளர்ச்சி குறித்து பதிவு செய்துள்ளார். எழுத்தாளராக மட்டுமல்லாமல் சிறந்த பேராசிரி யராகவும் திகழும் பெருமாள் முருகனுக்கு மரியாதை தராமல், அவரை அச்சுறுத்தி எழுத்துலகத்தை விட்டே வெளியேற்றியிருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும் என் றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழநெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.