16, 26-ம் தேதிகளில் டாஸ்மாக் விடுமுறை

16, 26-ம் தேதிகளில் டாஸ்மாக் விடுமுறை
Updated on
1 min read

சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திருவள்ளுவர் மற்றும் குடியரசு தினங்களை முன்னிட்டு 16 மற்றும் 26-ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனைச் சார்ந்த பார்கள் மற்றும் கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களின் பார்கள் என அனைத்தும் வரும் 16- ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ம் தேதி குடியரசு தினம் ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு விதி எண் 12 மற்றும் 25 ஆகியவற்றின் படி எடுக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து மதுபான கடைகளும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். இதனை கடைப்பிடிக்க தவறும் கடைகள், கிளப்புகள் மற்றும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in