

விடுதி மேலாளருடன் சிபிசிஐடி போலீஸார் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் கென்னத் லேன் சாலையில் பழைய காவல் ஆணையர் அலுவலகம் எதிரே பிரபலமான ஒரு தங்கும் விடுதி உள்ளது. சிபிசிஐடி போலீஸ்காரர் கள் 2 பேர் தங்கள் பெயரில் 2 அறைகளை முன்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவில் அந்த அறைகளில் 10-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீஸ்காரர்கள் கூடி மது அருந்தி, சீட்டு விளையாடி யதாக கூறப்படுகிறது.
போலீஸ்காரர்கள் வந்த வாகனங் கள் விடுதி முன்பு ஏராளமாக நிறுத் தப்பட்டு இருந்தன. அவற்றில் போலீஸ் என்றும் எழுதப்பட்டு இருந்தது.
அப்போது அங்கு வந்த லாட்ஜ் உரிமையாளர் பணியில் இருந்த மேலாளரிடம், ‘ஏன் இவ்வளவு போலீஸ் வாகனம் நிற்கிறது' என கேட்டார். அதற்கு அவர் 10-க்கும் அதிகமான போலீஸ்காரர்கள் வந்திருப்பதாக கூறினார். உடனே அறையை பதிவு செய்த 2 பேரை தவிர மற்றவர்களை வெளியே போகச்சொல்லுங்கள் என்று மேலாளரிடம் உரிமையாளர் கூறினார். மேலாளரும் போலீஸா ரிடம் அப்படியே சென்று கூற, போலீஸ் காரர்களுக்கும், மேலாள ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விடுதி உரிமையாளர் எழும்பூர் போலீஸிடம் புகார் கொடுக்க, அவர்கள் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி சிபிசிஐடி போலீஸாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.