Published : 30 Jan 2015 11:14 AM
Last Updated : 30 Jan 2015 11:14 AM

சென்னையில் கல்லூரி மாணவிகள் கூந்தல் தானம்

புற்று நோயால் பாதிக்கப்பட்டு தலைமுடியை இழந்தப் பெண்களுக்கு ‘விக்’ தயாரிக்க உதவும் வகையில் கூந்தல் தானம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. | வீடியொ இணைப்பு கீழே |

புற்று நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையான கியூமோதெரபி யினால் முடி கொட்டிவிடும். இவ்வாறு பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு ‘விக்’ தயாரித்து வழங்கும் வகையில் ‘கிரீன் டிரண்ட்ஸ்’ என்கிற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் தங்களாகவே முன்வந்து கூந்தலை தானமாக வழங்கினர். ஒவ்வொருவரிடம் இருந்தும் 5 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை கூந்தல் வெட்டி எடுக்கப்பட்டது. சிலர் கூந்தல் முழுவதையும் தரவும் தயாராக இருந்தனர்.

மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட கூந்தல், அங்குலம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு பக்குவப்படுத்தி பின்னர் விக் தயாரித்து வழங்கப்படும்.