

முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளி யிட்ட அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பல்லகச்சேரி கிராமம், காட்டுக்கொட்டகையில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த 5-ம் தேதி ராமச்சந்திரனின் மகள் மதுமிதா தவறி விழுந்து இறந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
சிறுமி மதுமிதாவின் பெற்றோருக்கும், உற வினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மதுமிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறியுள்ளார்.