

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ளதாகவும், அம்மா சிமெண்ட் உள்ளிட்ட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்குத் தடை இல்லை என்றும் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந் துள்ளன. ரங்கம் தொகுதி மட்டு மின்றி திருச்சி மாவட்டம் முழு வதும் தேர்தல் நடத்தை விதி கள் அமலில் இருக்கும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அம்மா சிமெண்ட் திட்டம் உள்பட மற்ற திட்டங்களை ரங்கம் தொகுதியில் அமல்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை. புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்க முடியாது.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக, திருச்சி மாவட்டம் ரங்கம் கோட்டம் வருவாய்க் கோட்டாட்சியர் வி.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜனவரி 1ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வெளியிடப்பட்ட வாக்கா ளர் பட்டியல், தற்போது வரைவு வாக்காளர் பட்டியலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தொடர்ந்து வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் நடந்து வருகிறது. இடைத் தேர்தல் நடவடிக்கைக ளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜனவரி 19-ம் தேதி வெளியிடப்படும். இந்த நாளை தகுதியாகக் கொண்டு முன் கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும். அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர் சேர்ப்பதற்கான முகாம் நடத்த வேண்டுமென்று கோரிக்கை எழுந் தால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் துறை சிறப்பு முகாம் நடத்த வாய்ப்புள் ளது.
கடந்த 2011 சட்டசபைத் தேர்த லின் போது, ரங்கம் தொகுதியில் இரண்டு லட்சத்து 20 ஆயிரத்து 962 வாக்காளர்கள் இருந்தனர். நாடாளுமன்றத் தேர்தலின் போது, இரண்டு லட்சத்து 66 ஆயிரத்து 872 ஆக வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்தது.
கடந்த நவம்பரில் நடந்த வாக் காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்துக்குப் பின், ஜனவரி 5ம் தேதி வெளியிடப் பட்ட பட்டியலின் படி, இரண்டு லட்சத்து 70 ஆயிரத்து 129 வாக்காளர் கள் உள்ளனர். இதில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 20 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 96 பேர் பெண்கள் மற்றும் 13 பேர் இதர வாக்காளர்கள் இடம் பெற்றுள் ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கான வாக் குச்சாவடிகள் குறித்த அறிவிப் பைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளி யிட்டுள்ளது. இதன்படி, ரங்கம் தொகுதியில் 138 இடங்களில் 322 வாக்குச் சாவடிகள் அமைக்கப் படுகின்றன.
இந்த மையங்களில் மொத்தம் 1,400 மின்னணு வாக்கு இயந் திரங்கள் தேவைப்படுவதாகக் கண் டறியப்பட்டு, அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களும் சோதனை செய்யப்பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.