மெரினாவில் தத்தளித்த இளைஞர் மீட்பு

மெரினாவில் தத்தளித்த இளைஞர் மீட்பு
Updated on
1 min read

மெரினா கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இளைஞரை மீனவர்கள் மீட்டனர்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் சஞ்சய்காந்தி (29). இவர் சென்னை அருகேயுள்ள ஊரப்பாக்கத்தில் கட்டிட வேலை செய்து வருகிறார். புத்தாண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த அவர் கடலில் இறங்கி குளித்துள்ளார். அப்போது ராட்சத அலையால் அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதைப் பார்த்த மீனவர்கள் சிலர் உடனடியாக கடலில் குதித்து சஞ்சய்காந்தியை காப்பாற்றினர். மயக்க நிலையில் இருந்த சஞ்சய்காந்தி உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in