7-வது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி பிப். 3-ல் தொடங்குகிறது

7-வது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி பிப். 3-ல் தொடங்குகிறது
Updated on
1 min read

7-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரியில் பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகை யாளர் சந்திப்பு சென்னை மயிலாப் பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண் காட்சியின் துணைத் தலைவரான ராஜல‌ஷ்மி நிருபர்களிடம் கூறிய தாவது:

இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி சென்னையில் இது வரை 6 முறை நடத்தப்பட்டது. இந்நிலையில், 7-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் வரும் பிப்ரவரி 3-ம் தேதியன்று தொடங்கவுள்ளது. இந்த கண்காட்சி பிப்ரவரி 9-ம் தேதி வரை 7 நாட்களுக்கு நடக்கவுள்ளது.

கண்காட்சியில் ஆறு முக்கிய விஷயங்கள் மையக்கருவாக எடுத்துக் கூறப்படவுள்ளது. வனம் மற்றும் வன விலங்குகளை பாது காக்க வேண்டும், அனைத்து உயி ரினங்களையும் பாதுகாக்க வேண் டும், சுற்றுச்சூழலைப் பராமரித்தல், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையை போற்றுதல், நாட்டுப்பற்றை உணர்த்துதல் ஆகிய 6 பண்புகள் இந்த கண்காட்சியில் வலியுறுத்தப்படவுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு வெவ்வேறு வகையான விநாடி வினா மற்றும் 180-க்கும் அதிகமான விளையாட்டு போட்டிகளையும் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in