

கச்சா எண்ணெய் விலைக்கேற்ப டீசல், பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்லதம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 54 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், டீசல், பெட்ரோல் விலையை தற்போது உள்ள விற்பனை விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும்.
ஆனால், உற்பத்தி வரியை மூன்று முறை உயர்த்திவிட்டு விலையை குறைக்காமல் எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, கச்சா எண்ணெய் விலைக்கேற்ப டீசல், பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.