Published : 12 Jan 2015 10:29 AM
Last Updated : 12 Jan 2015 10:29 AM

சென்னையில் போக்குவரத்து விழிப்புணர்வு: 15 இடங்களில் கையெழுத்து இயக்கம்

சென்னையில் 15 இடங்களில் போக்குவரத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை போக்கு வரத்து போலீஸார் நடத்தினர்.

போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் தமிழகம் முழுவதும் ஜனவரி 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த தினங்களில் ஹெல்மட் அணிவது, மது அருந்தி மற்றும் வேகமாக வாகனம் ஓட்டுவது தவறு, சிக்னல்களை மதித்து நடந்து கொள்வது உட்பட பல்வேறு போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சென்னை போக்குவரத்து போலீஸார் சார்பில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நேற்று நடந்த விழாவில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கையெழுத்து போட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

காவல் துணை ஆணையர் மகேஷ்குமார், உதவி ஆணையர் கமீல் பாட்ஷா, ஆய்வாளர் செல்வராஜ் உட்பட பல அதிகாரிகள் மற்றும் போலீஸார் விழாவில் கலந்து கொண்டனர்.

சென்னையில் கோயம்பேடு, பெரம்பூர், டவர் பார்க், மாயாஜால், பெசன்ட்நகர், பீனிக்ஸ் மால், ஏஜி சர்ச், சென்ட்ரல் ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ, காந்தி சிலை, உழைப்பாளர் சிலை, காந்தி மண்டபம், ஸ்கை வாக், பனகல் பார்க், ஃபோரம் மால் ஆகிய 15 இடங்களில் போக்குவரத்து போலீஸார் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகின்றன.

சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி, சென்னையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியை தமிழக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ப.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். (அடுத்த படம்) போக்குவரத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் சென்னை சென்ட்ரலில் நேற்று தொடங்கி வைத்தார். துணை ஆணையர் மகேஷ்குமார், ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் அருகில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x