

திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை சேர்ந்திசைத்து சத்குரு தியாகராஜருக்கு இசைக் கலைஞர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறு காவிரிக் கரையில் உள்ள தியாகராஜர் சமாதி வளாகத்தில், அவரது 168-வது ஆராதனை விழா ஜனவரி 6-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், தியாகராஜர் முக்தியடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளான நேற்று அவரது பஞ்சரத்ன கீர்த்தனைகளை சேர்ந் திசைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காலை 5.30 மணி யளவில் திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தி லிருந்து உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் புறப்பட்டு அவரது சமாதியை வந்தடைந்தது. அங்கு, தியாகராஜரின் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
காலை 8.30-க்கு நாதஸ்வர இசையுடன் ஆராதனை விழா தொடங்கியது. பஞ்சரத்ன கீர்த் தனைகளை சேர்ந்திசைக்கும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிரபஞ்சம் பாலசந்திரனின் புல் லாங்குழல் இசையுடன் தொடங் கியது. தொடர்ந்து, காலை 10 மணி வரை நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி தியாகராஜ ருக்கு இசையால் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல இசைக் கலைஞர் கள் உமையாள்புரம் சிவராமன், சுதா ரகுநாதன், ஓ.எஸ்.அருண், நெய்வேலி சந்தானகோபாலன், பாபநாசம் அசோக் ரமணி, சீர்காழி சிவசிதம்பரம், நித்ய மகாதேவன், விஜயசிவா, மஹதி, மகாநதி ஷோபனா உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் சேர்ந்திசைத்து தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரகாசம், ராமநாதன், தியாக பிரம்ம மஹோற்சவ சபையின் அறங்காவல் குழுத் தலைவர் ஜி.கே.வாசன், சபையின் தலைவர் ஜி.ரங்கசாமி மூப்பனார், செயலர்கள் ஏ.கே.பழனிவேலு, முஷ்ணம் வி.ராஜாராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இரவு 11 மணி வரை இசைக் கலைஞர்களின் கச்சேரி நடைபெற் றது. இரவு 8 மணிக்கு நாதஸ் வரம் மற்றும் தவில் இசைக் கலை ஞர்களின் பஞ்சரத்ன மல்லாரியும், தியாக ராஜர் வீதியுலாவும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் விடையாற்றியுடன் விழா நிறைவடைந்தது.