Published : 03 Jan 2015 12:08 PM
Last Updated : 03 Jan 2015 12:08 PM
குரோஷியாவின் மரின் சிலச் மெல்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளார். சர்வதேச ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் 9-வது இடத்தில் சிலிச் உள்ளார். வலது தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் மெல்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜனவரி 19-ம் தேதி தொடங்குகிறது. எனவே காயத்தில் இருந்து விரைவில் குணமடைந்து அப்போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலிச் இப்போது விலகியுள்ளார் என்று அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் தொடங்கும் மெல்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், நிஷிகோரி, மிலோஸ் ரயோனிக், கிரிகோரி திமித்ரோவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பலர் களமிறங்குகின்றனர்.