

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூரை அடுத்த காரியமங்கலம் ஊராட்சியில் பசுமை வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு செய் துள்ளதாக ஊராட்சித் தலைவர் மீது ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
காரியமங்கலம் ஊராட்சியில் 2014-15 ஆண்டில் பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 8 வீடுகள், பொதுப் பிரிவினருக்கு 4 வீடுகள் என மொத்தம் 12 வீடுகள் ஒதுக்கப்பட் டன. இதில், பிற்படுத்தப்பட்ட பிரி வினருக்கு ஒதுக்கப்பட்ட 8 வீடு களை, பொதுப் பிரிவினருக்கு ஊராட்சி நிர்வாகம் ஒதுக்கியது. பயனாளிகள் பசுமை வீடுகளைக் கட்டினர்.
இந்த நிலையில், பசுமை வீடுகள் ஒதுக்கப்பட்ட பயனாளிகளில் ஏக வள்ளி, அம்சவள்ளி, வசந்தா, செல்வி, விஜயா ஆகிய 5 பேர், பிற்படுத்தப்பட்டோர் பிரி வைச் சேர்ந்தவர்கள் என்று தவறான சான்றை அளித்து வீடு பெற்றதாகக் கூறி, அவர்களது பசுமை வீடுகளை ரத்து செய்து உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அவர்கள் 5 பேரும், ‘பசுமை வீடுகள் ஒதுக்கிய தில் தங்களுக்கு விவரம் எதுவும் தெரியாது என்றும், பசுமை வீடு பெற்றுத் தருவதற்காக ஊராட்சித் தலைவர் சத்யா சீனிவாசன் தலா ரூ. 20 ஆயிரம் பெற்றுக் கொண்ட தாகவும்’ மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் கூறிய தாவது: திடீரென பசுமை வீடு களை ரத்து செய்துள்ளதால் நாங் கள் மிகவும் பாதிக்கப்பட்டுள் ளோம். ஊராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளைக் கண்டறியாமல், எங்களுக்கு ஆணை வழங்கி விட்டு தற்போது எங்கள் மீது பழி சுமத்துகின்றனர். பயனாளிகளின் விவரங்களை அதிகாரிகள் முன்பே நேரில் வந்து ஆய்வு செய்தபோது, ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது, எதுவும் கூறாமல் இருந்துவிட்டு, தற்போது நாங் கள் தவறு செய்துள்ளதாகக் கூறுகின்றனர். ஊராட்சி நிர்வா கம் மற்றும் பசுமை வீடு திட்ட அதிகாரிகளை காப்பாற்றுவதற் கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
காரியமங்கலம் ஊராட்சித் தலைவர் சத்யா சீனிவாசன் கூறிய தாவது: பிற்படுத்தப்பட்ட பிரிவின ருக்கு ஒதுக்கப்பட்ட பசுமை வீடு களை கட்ட அந்தப் பிரிவைச் சேர்ந்த யாரும் முன்வரவில்லை. எனவே, பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களை பயனாளிகளாகத் தேர்வு செய் தோம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிற் படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். இதனால், பொதுப் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட பயனாளி களின் பசுமை வீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பயனாளிகளிடம் இருந்து பணம் ஏதும் பெறவில்லை. உயர் அதிகாரி களிடம முறையிட்டு அவர்களுக்கு மீண்டும் பசுமை வீடு பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறேன் என்றார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் முத்துமீனாள் கூறியதாவது: பசுமை வீடுகள் 30 சதவீதம் பிற்படுத்தப்பட்ட பிரி வினருக்கும், 70 சதவீதம் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப் படும். காரியமங்கலம் ஊராட்சி யில் பிற்படுத்தப்பட்ட பிரிவின ருக்கு 8 பசுமை வீடுகள் ஒதுக்கப் பட்டுள்ளது குறித்து விசாரிக்கப் படும். மேலும், தவறான தகவல் கொடுத்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டால் உரிய நட வடிக்கை எடுக்கப்படும். காரிய மங்கலம் ஊராட்சியில் எழுந்துள்ள பசுமை வீடுகள் புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.